பிக் பாசை தொகுத்து வழங்கப்போகும் சிம்பு..!
Inimey Ippadithaan Audio Launch Photos
சினிமா ஷுட்டிங் பாதிக்கப்படுவதால் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமல் விலகியதற்கு காரணமாக கூறினாலும், பல நெருக்கடிகள் காரணமாகவே அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தற்போது புதிய ஹோஸ்டாக அறிவிக்கப்பட்டுள்ள சிம்புவிற்கும் அதே போன்ற நெருக்கடிகள் ஏற்படாதா என பலர் கேட்டு வருகின்றனர்.
முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்புக்கள் குறைந்தவர்கள் தான் சின்னத்திரை பக்கம் வருவார்கள் என சொல்வார்கள். ஆனால் இப்போது அந்த நிலை சொத்தமாக மாறி விட்டது.
சினிமாவில் படு பிஸியாக இருப்பவர்களும் சின்னத்திரையில் டாப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வந்து விடுகிறார்கள். கமல், மோகன்லால், விஜய் சேதுபதி, தமன்னா, சல்மான் கான் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது சிம்புவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.






