--- --:--:-- --

படுத்த படுக்கையாக ஆஜரான செந்தில் பாலாஜி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1

புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக செந்தில் பாலாஜி காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

 

அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

 

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது.இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

 

படுக்கையில் படுத்திருந்தவாறு ஆஜர்படுத்தப்பட்டதால் என்ன ஆனது? என நீதிபதி கேட்டார். அதற்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக சிறை காவலர் விளக்கமளித்தார்.

 

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 52வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon