--- --:--:-- --

இருளை அகற்றுவோம்…. தெற்கு தொகுதியில் செல்வராஜ் பிரசாரம்!

selvaraj 03

இருளை அகற்றி திருப்பூர் தெற்கு தொகுதியின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று கூறி, திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருப்பூர் தெற்கு தொகுதியில் முன்னாள் மேயர் க.செல்வராஜ் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு ஒருவாரம் கூட இல்லாத நிலையில், மிகத்தீவிரமாக ஆதாரவாளர்களுடன் செல்வராஜ் வாக்கு சேகரித்து வருகிறார். அண்மையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திருப்பூருக்கு வந்து சென்றதால், திமுகவினர் மிகவும் உற்சாகமுடன் உள்ளனர்.

இந்த நிலையில், உற்சாகம் சிறிதும் குறையாமல் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் காலையில் தொடங்கி இரவு வரை, வேட்பாளர் செல்வராஜ் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தான் எம்.எல்.ஏ. ஆனால் என்ன செய்யப்போகிறோம் என்பதை துண்டுப் பிரசுரமாக வினியோகித்து வாக்கு சேகரிப்பதுடன், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களையும் தெரிவித்து வாக்கு கேட்டு வருகிறார்.

 

திருப்பூரை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூரில் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது சரியாக குப்பை அகற்றுவது இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க, அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று, செல்வராஜ் வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறார்.

திருப்பூர் தொழில் துறையை பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி கொண்டு வந்து வளர்ச்சியை தடுத்தது, தற்பொழுது அனைத்து மூலப் பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது. பல சிறு குறு நடுத்தர தொழில் துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதை கண்டுகொள்ளாத மத்திய மோடி அரசின் அடிமை அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்றும் பிரசாரங்களில் அவர் சூளுரைத்து வருகிறார்.

 

பிரசாரத்திற்கு செல்லுமிடங்களில் எல்லாம் செல்வராஜுக்கு பொதுமக்கள் உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆளுயர மாலை, அதிர்வேட்டு முழக்கம் என்று, தொண்டர்களின் ஆர்பரிப்புக்கு மத்தியில் செல்வராஜ் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon