வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ!
பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி வீதத்தில் கால் சதவீதம் குறைத்துள்ளது. வட்டி குறைப்பு அறிவிப்பு வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை வட்டி விகிதம் 8.05 விகிதத்தில் இருந்து 7.8 சதவீதமாக குறையும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக் கடன் மற்றும் சிறுதொழில் கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகை குறையும். அதேசமயம் புதிதாக வாங்கும் கடன்களுக்கான வட்டி 8.15 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படியே வட்டி குறைப்பு நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார் நிதிச் சந்தை நிபுணர் நாகப்பன்.






