இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதனால் இன்று தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






