--- --:--:-- --

இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

2

ங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா பெயலாக வலுப்பெற்றுள்ளது.

 

இதற்கிடையே, டிட்வா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவும் என தென் மண்டல வானிலை மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், டிட்வா புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டையில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

 

ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கான் ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது. அதேநேரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளையும் (சனிக்கிழமை) திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், 30ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டையும் வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் காரணமாக ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே புயல் எதிரொலியால் சென்னை, பாம்பன், நாகை, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Right Menu Icon