--- --:--:-- --

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழை..!

2

மிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிங்கவரம், ஊரணிதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

 

செஞ்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெடுஞ்சாலையில் கொட்டித் தீர்த்த மழையால் தேங்கிய நீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. அப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Right Menu Icon