--- --:--:-- --

திருவாடானை அருகே புரவி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது..!

3

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள டி.இளையான்குடி கிராமத்தில் அருள்மிகு கூத்தப் பெருமாள் அய்யனார், அருள்மிகு  மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த தமிழ் மாதம் ஆணி 32ம் தேதி செவ்வாய்கிழமை  காப்பு கட்டுதலுடன் துவங்கி நடை பெற்று வருகிறது. அய்யானார் குதிரையில் வந்து கிராமத்தை காத்து வருவதாக ஐதீகம் உள்ளது.

 

இன்று திருவிழாவின் முக்கிய நிழ்வாக புரவி எடுப்பு விழா நடந்தது.
முன்னதாக ஆண்டி வயல் கிராமத்தில் மண்ணால் செய்யப்பட்ட குதிரை மற்றும் அய்யனார், கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்கள் மற்றும் சிறு பிள்ளைகள் போல் பொம்மைகள்  சிலையாக செய்து வைக்கப்பட்டிருந்தது.

அதனை வழிபடும் விதமாக பக்தர்கள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை காணிக்கையாக செலுத்தி வணங்கினார்கள். அதனை தொடர்ந்து குதிரை,  மற்றும் அய்யனார் பரிவார தெய்வ  சிலைகளை தலையில் சுமந்து கொண்டு 1 கி.மீ தூரம் நடந்து வந்து கோவில் முன்பு வைத்து வழிபட்டனர். இந்நிகழ்வில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்கள்.

Right Menu Icon