திருவாடானையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
திருவாடானையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நமது சங்கத்தின் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றும் விதமாக செயல்படும் வருவாய் நிர்வாக ஆணையரின் நடவடிக்கைகளை கண்டித்து நடந்தது. இதில் மாநில நிர்வாக ஆணையருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
பின் அரசால் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கிய சிம் கார்டுகளை மண்டல துணை வட்டாச்சியரிடம் ஒப்படைத்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




