--- --:--:-- --

முக்கியத்துவம் பெறும் பிரதமர் மோடியின் குஜராத் பயணம்..!

1

லக சுகாதார அமைப்பின் சார்பில் குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படும் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

 

மூன்று நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மாவட்டங்களில் 600 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பால் பண்ணை வளாகம், மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் மையம் ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.

 

இதை தொடர்ந்து மொரீஷியஸ் பிரதமர் பிரவீன்குமார் ஜெகநாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் ஆகியோர் முன்னிலையில் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் அமைக்கப்படும் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கும், பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 

இது பாரம்பரிய மருந்துகளுக்காக அமைக்கப்படும் உலகின் முதலாவது மற்றும் ஒரே சர்வதேச மையம் என்பது குறிப்பிடதக்கது. குஜராத் மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 3 நாள் சுற்றுப்பயணம் அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon