எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
இந்தியர்களின் பாதுகாப்பு எந்தவிதமான சமரசமும் கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இந்திய மாணவர்களை மீட்கும் விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப் படுவார்கள் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இதனை திட்டவட்டமாக தெரிவித்தார்.






