--- --:--:-- --

ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி..!

1

பிரதமரான பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு இன்று செல்லவுள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காலை 9 மணியளவில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் மற்றும் கோல்வால்கர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆா்எஸ்எஸ் அமைப்பால் 2014-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பன்னோக்கு கண் மருத்துவமனையின் விரிவாக்கமான மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த பயணத்தின் போது, அம்பேத்கா் புத்த மதத்தைத் தழுவிய இடமான தீக்ஷாபூமிக்குச் சென்றும் பிரதமர் மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2012ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு சென்ற மோடி, 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக இன்று செல்ல உள்ளார்.

Right Menu Icon