ஆடி 2 ஆம் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
கோவையில் ஆடி 2ஆம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தினால் கூடிய அபிஷேகம் நடைபெற்றது.ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம் என்று கருதப்பட்டு பக்தர்கள் அனைவரும் அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.இதற்காகவே இம்மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாக திகழ்ந்து தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் வருடந்தோறும் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் உற்சாகமாக நடந்துவருகின்றது.

இந்த நிலையில் ஆடி 2ஆம் வெள்ளியான இன்று கோவை புளியகுளம் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அலங்காரம் அணிந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

ஆடி மாத வாரந்தோறும் வெள்ளியன்று சிறப்பு அலங்காரகங்கள் செய்து வரும் நிலையில் இன்று கலைமகள் வேடத்தில் மின்னுவது போல் அம்மன் காட்சியளித்தது. அம்மனை வழிபட கோவை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




