--- --:--:-- --

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு!!

hf

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 10% ஆக குறைக்கப்படும் என நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

 

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை வழங்கப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:

 

ஆண்டு ஒன்றுக்கு தனி நபர் வருமானம் ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை இருந்தால் வருமான வரி 20% லிருந்து 10% ஆக குறைப்பு .

 

ரூ. 7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20 %இல் இருந்து 15 சதவீதமாக குறைப்பு

ரூ. 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருமானம் என்றால் 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைப்பு

 

ரூ 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 

ரூ .15 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி என்பதில் மாற்றமில்லை.

 

ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் வரை இருந்தால் வருமான வரி இல்லை.

 

இந்த வருமான வரி குறைப்பு மூலம் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ரூ. 40,000 கோடி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon