தமிழகம் முழுவதும் குடிநீர் பரிசோதனை செய்ய உத்தரவு..!
தமிழகம் முழுவதும் குடிநீரின் மாதிரிகளை பரிசோதித்து அறிக்கை அளிக்க, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், சுழற்சி முறையில் தினமும் 10 குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குடிநீர் மாதிரியை பரிசோதிக்கவும், 100% சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





