--- --:--:-- --

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்

1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் ஆலங்குளம் தொகுதியின் எல்.எல்.ஏவான மனோஜ் பாண்டியன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

 

2017 ஆம் ஆண்டு சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் செய்த போது, அவருக்கு ஆதரவாக இருந்தவர் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன். அதிமுகவில் இருந்து ஓ,பன்னீர்செல்வம் நீக்கப்பட்டபோதும் அவரின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

 

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று திராவிடக் கொள்கையை பாதுகாக்கின்ற தலைவராகவும், போராட்டக் கொள்கையை எங்கும் அடகு வைக்காதே ஒரு தலைவராகவும் எவ்வளவு சோதனை வந்தாலும் முயற்சிகளை சிறப்பாக செய்யக்கூடிய தலைவராக பார்த்து சிந்தித்து தீர்க்கமான முடிவு எடுத்த பின் தான் தற்போது திமுகவில் இணைந்துள்ளேன்.

 

இன்று மாலை அதிமுக எம்எல்ஏவாக பதவி ராஜினாமா செய்கிறேன்.வேறொரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கத்தின் சொல்படி நடக்கின்ற துர்பாக்கியமான காலம் தான் தற்போது அதிமுகவில் இன்று இருக்கிறது.தன்னுடைய குடும்பத்திற்காக அதிமுக கட்சியே அடகு வைத்துள்ள கட்சியுடன் இல்லாமல் கொள்கைக்காக உள்ள கட்சியுடன் இன்று நான் இணைந்துள்ளேன். திமுவில் இணையும் முடிவெடுத்த பின் இங்கு வந்த என்னை முதல்வர் ஸ்டாலின் புன்னகை உடன் வரவேற்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

Right Menu Icon