--- --:--:-- --

இடுப்பில் மறைத்து வைத்த கத்தி எமனாக மாறியது..! இளைஞர் சாவு

1

சென்னை அயனாவரத்தில் மது மயக்கத்தில் தகராறில் ஈடுபட்ட நபர் எதிராளியை தாக்குவதற்காக இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை உருவிய போது அது அவர் வயிற்றிலேயே பாய்ந்ததால் உயிரிழந்தார். சென்னை அயனாவரத்தில் சேர்ந்த கூலி தொழிலாளி மனோகரனுக்கு சரிதா என்பவருக்கும் இடையே ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

 

மனோகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும் அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அப்போதெல்லாம் சரிதா அவரது தாய் வீட்டுக்கு சென்று விடுவாராம் வழக்கம்போல் மது மயக்கத்தில் வீட்டுக்கு திரும்பிய மனோகரன் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார் நிதானம் இல்லாமல் இருந்தவருக்கு சரிதா அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு சென்றது நினைவில் வந்தது போதும் தனக்கும் மனைவிக்கும் சண்டை வர மாமியாரே காரணம் என தவறாக எண்ணிய மனோகரன் அவரது வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

அப்போது அருகில் வசித்து வந்த ராகவேந்திரா என்பவரை மாமியார் உதவிக்கு அழைத்துள்ளார் அவர் மனோகரனை தட்டிக்கேட்க இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது ராகவேந்திரா படுத்துவதற்காக தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை மனோகரன் எடுத்துள்ளார். மது மயக்கத்தால் ஏற்பட்ட தள்ளாட்டத்தில் கத்தி மனோகரனின் வயிற்றில் பாய்ந்தது உடன் அவர் ஆணுறுப்பையும் வெட்டி உள்ளது.

 

எனினும் அதே கத்தியால் ராகவேந்திரா ,மனோகரன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். தகவலறிந்து இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் செல்லும் வழியிலேயே மனோகரன் உயிரிழந்துவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon