ஹோட்டல்களில் இருந்த சத்துணவு முட்டைகள்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்..!
கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் சின்னசேலத்தில் உள்ள உணவகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்பொழுது ஹார்ட் பீட் என்ற ஓட்டலில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஹோட்டல்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட முத்திரையிடப்பட்ட 100 முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு ஐந்தாயிரம் அபராதமும் விதித்தனார்.





