--- --:--:-- --

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் தந்தைக்கு நோட்டீஸ்..!

9

ஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் மாணவியின் தந்தை நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

தஞ்சை மாணவியின் தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

 

இந்த விசாரணையின் பொழுது வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாநில உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உத்தரவுக்கு தடை விதிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கவுரவ பிரச்சினையாக கருத வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது குறிப்பிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் மாணவியின் தந்தை 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Right Menu Icon