துபாய் இளவரசி லதீபா உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை..!
தான் சிறை வைக்கப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்ட துபாய் இளவரசி லதீபா உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை என ஐநா சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
ஆனால் அவர் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு அரச குடும்பத்தினர் கூறியிருந்தனர். இந்த நிலையில் இளவரசி லதீபா உயிருடன் இருக்கும் ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கூறியிருந்த நிலையில் இதுவரை அரசு எந்த ஆதாரமும் வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.






