--- --:--:-- --

தமிழகத்தில்  இன்று முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்..!

1

மிழகத்தில்  இன்று காலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. நண்பகல் 12:00 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி. அதுவும் குறிப்பிட்ட கடைகள் மட்டும் தான் திறக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இரவு நேரங்களில் ஞாயிறு ஊரடங்கில் எந்த தொழிற்சாலை இயங்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. பேருந்து, ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி.

 

தனியாக இயங்கும் காய்கறி கடைகள் 12:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிவரை மளிகைக் கடைகள் செயல்படலாம். நண்பகல் 12 மணிவரை பலசரக்கு கடைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பலசரக்கு கடைகள் என்றால் எந்தெந்த கடைகளில் என்ற தெளிவான விளக்கம் அளிக்காததால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. மளிகை, பல சரக்குகள் மற்றும் காய்கறி கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

பால் வினியோகம் மற்றும் மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கலாம், அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, கடைகளுக்கு 12:00 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உட்கார்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு கிடையாது உள்ளரங்க திறந்தவெளி விழாக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் தனியார் தொழிற்சாலைகள் இயங்கலாம். ஆனால் சில பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊடகம், பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம்போல் செயல்படலாம்.

 

இரவு நேர ஊரடங்கு ஞாயிறு ஊரடங்கில் மட்டும் குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மட்டும் இயங்கலாம். ஞாயிறு ஊரடங்கில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் உணவக பார்சலுக்கு அனுமதி. டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 வரை மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளுக்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Right Menu Icon