--- --:--:-- --

இயற்பியல் முதுகலை மாணவர்களுக்கு நெட் தேர்வுப் பயிற்சி..!

10

மிழ்நாட்டில் உள்ள முதுகலை மாணவர்களை வலுவூட்டும் வகையில், சென்னை பல்கலைக்கழகம், இயற்பியல் துறையில் பேராசிரியராக விரும்பும் மாணவர்களுக்காக யு.ஜி.சி-நெட் (UGC-NET) தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

 

தேசிய தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படும் இந்தத் தேர்வு, விண்ணப்பதாரரின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பெறுவதற்கும், உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுவதற்கும், மேலும் PhD சேர்க்கை பெறுவதற்கும் ஆன தகுதியைத் தீர்மானிக்கும். அடுத்த யுஜிசி-நெட் UGC-NET தேர்வு ஜனவரி 2026-ல் நடைபெறும்.

 

இதுகுறித்து, இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை பல்கலைக்கழகத்தின் நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பத்திற்கான தேசிய மையத்தின் (NCNSNT) உதவிப் பேராசிரியருமான பிரகாஷ், டிடிநெக்ஸ்ட் ஆங்கில நாளிதழிடம் கூறியதாவது: “இந்த பயிற்சித் திட்டம், இயற்பியலில் நெட்/கேட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான பாடங்களில் பிரத்யேக வழிகாட்டுதலை வழங்கும். இது அவர்களின் கல்வித் திறனையும், தன்னம்பிக்கையையும், மற்றும் தொழில் வாய்ப்புகளையும் மேம்படுத்த உதவுகிறது.”

 

இந்த பயிற்சித் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு இயற்பியல் தொடர்பான தலைப்புகளில் கருத்தியல் தெளிவு (conceptual clarity) மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “அவர்கள் தேர்வுச் சூழலில் உயர்நிலை சிக்கல்களைத் (advanced-level problems) தீர்ப்பதற்கு நன்கு தயாராவார்கள்; மேலதிக ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் பணிகளைத் தொடர ஊக்கமும் தன்னம்பிக்கையும் பெறுவார்கள்; மேலும் தேர்வுப் போக்குகள், உத்திகள் மற்றும் தேவையான வளங்கள் குறித்து சிறந்த புரிதலையும் பெறுவார்கள்,” என்று அவர் கருத்து தெரிவித்தார். இந்த பயிற்சித் திட்டம் நவம்பர் 29 ஆம் தேதி வரை வார இறுதி நாட்களில் நடத்தப்படும்.

Right Menu Icon