நீட் ஆன்சர் கீ வெளியீடு..!
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாகும்.
இந்த ஆண்டு நீட் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் எனும் ஆன்சர் கீ வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ஓ.எம்.ஆர் தாளின் நகல்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு 2025 எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்அரசு மருத்துவக் கல்லூரிகள்
பொதுப் பிரிவு – 540 – 560
பி.சி – 510 – 530
பி.சி.எம் – 490 – 510
எம்.பி.சி – 480 – 500
எஸ்.சி – 400 – 430
எஸ்.சி.ஏ – 350 – 380
எஸ்.டி – 330 – 350
தனியார் மருத்துவக் கல்லூரிகள்
பொதுப் பிரிவு – 510 – 520
பி.சி – 470 – 490
பி.சி.எம் – 470 – 485
எம்.பி.சி – 460 – 480
எஸ்.சி – 380 – 410
எஸ்.சி.ஏ – 320 – 350
எஸ்.டி – 300 – 330






