மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு..!
தென்காசி ராமநதி காற்றில் மீனுக்காக வைத்த வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். இந்த அணைக்கட்டு பகுதியில் மீன் பிடிப்பதற்காக சிறிய வலை ஒன்றை விரித்துள்ளார். அந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.
இதையடுத்து அந்த பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் எட்டடி நீளமுள்ள பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.






