மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்..!
திருச்சி விமான நிலையம் அருகே மனைவியை கணவரே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த செல்வம் அவரது மனைவி செல்வி தனது முதல் கணவரை பிரிந்த நிலையில் செல்வத்துடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்வியை வெட்டியுள்ளார். தரையில் விழுந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திலிருந்து செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்தவரை தேடி வருகின்றனர்.





