தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூறும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






