வலிநிவாரணி மாத்திரையை போதைக்கு பயன்படுத்திய நபர் கைது!
திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட K.செட்டிபாளையம் பகுதி அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதியில் இன்று 22.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஜீவானந்தம்(30) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 700 (Aspadal) வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






