--- --:--:-- --

காவலர்களை பிளேடால் தாக்கிய நபர் கைது..!

10

ள்ளக்குறிச்சி அருகே காவலர்களை பிளேடால் தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கல்லக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் தாமோதரன் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த வடிவேல் ஆகியோர் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசார் விசாரித்தபோது அந்த மர்மநபர் தாமோதரன் முகத்தில் பிளேடால் கிழித்துள்ளார்.

 

விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். காயமடைந்த போலீசாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon