மு.க.முத்துவின் உடல் தகனம்..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. முத்து வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்ய சென்னை பெசன்ட் நகர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு நடந்தது. அப்போது மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.






