--- --:--:-- --

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்… வடக்கு தொகுதியில் விஜயகுமார் பிரசாரம்!

vijayakumar 003

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் விஜயகுமார், தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

 

திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ. விஜயகுமார் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு அவர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியதை அங்கீகரிக்கும் வகையில் மீண்டும் அவருக்கே அதிமுக தலைமை வாய்ப்பை தந்துள்ளது.

 

இந்த நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே, அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் புடைசூழ விஜயகுமார் சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொகுதிக்குட்பட்ட பகுதிக்காரர் என்பதால், செல்லும் இடங்களில் எல்லாம் விஜயகுமாருக்கு பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தாரைதப்பட்டை முழக்கம் ஒருபுறம். பட்டாசு அதிர்வேட்டுகள் மறுபுறம் என்று அமர்க்களமாக ஆரவாரமாக செல்லும் விஜயகுமாரை பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதுதவிர அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 400 இருசக்கர வாகனங்களில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் படைசூழ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுக வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. பிரசாரத்தில் கூறுகையில், வடக்கு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் குடிநீர், தார்சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுதவிர, பொதுமக்கள் அவ்வப்போது தரும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, உடனுக்குடன் அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

திருப்பூர் வடக்கு தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடோடி வந்து திட்டங்களை நிறைவேற்றித்தரும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon