--- --:--:-- --

கரூர் கூட்ட நெரிசல் : விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்

4

ரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்தினர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரத்தில் உள்ள பேக்கரி கடை உரிமையாளர் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 

அதன்படி வேலுச்சாமிபுரம் பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள், காயமடைந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் சாட்சியங்களை சுற்றுலா மாளிகைக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வேலுச்சாமிபுரத்தில் உள்ள பேக்கரி கடை உரிமையாளர், இ-சேவை மைய உரிமையாளர், எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.

 

இதனிடையே, சிபிஐ உதவி கண்காணிப்பாளர் முகேஷ்குமார், ஆய்வாளர் மனோகரன் மற்றும் சிபிஐ வழக்கறிஞர் ஆகியோர் ஆவணங்களுடன் கரூர் குற்றவியல் நீதிமன்ற முதலாவது நீதிபதியை சந்தித்தனர். நீதிபதியின் தனி அறையில் சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை கேட்பதற்காகவும், ஆவணங்களை சரி பார்ப்பதற்காகவும் சிபிஐ அதிகாரிகள் சென்றதாக கூறப்படுகிறது.

Right Menu Icon