கேரளாவை உலுக்கிய குற்றவாளி ஜூலி சிறையில் தற்கொலைக்கு முயற்சி
கேரளாவில் 6 பேரை சொத்துக்காக கொலை செய்த வழக்கில் கைதான ஜூலி மணிக்கட்டை வெட்டிக்கொண்டு சிறையில் தற்கொலைக்கு முயன்றார்.
கேரள மாநிலம் கூடத்தாயி பகுதியை சேர்ந்த இவர் 14 ஆண்டுகளில் குழந்தை உட்பட ஆறு பேரை சயனைடு கொடுத்து கொன்றது தெரிய வந்ததையடுத்து கடந்த அக்டோபர் மாதம் அவரை போலீசார் கைது செய்தனர். கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜூலி இன்று அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் மணிக்கட்டை அறுத்துக் கொண்டார்.
தகவல் அறிந்த சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜூலி தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






