மோடி வந்து 2 இட்லி சாப்பிடணும் எனக்கூறிய இட்லி பாட்டி..!
மோடியை அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என இட்லி பாட்டி தனது ஆசையை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் அருகே உள்ள வடிவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் 30 வருடங்களாக இட்லி கடை நடத்தி வருகிறார்.
ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு சட்னி சாம்பாருடன் விற்பனை செய்து வரும் அவரை எல்லோரும் இட்லி பாட்டி என அழைத்து வருகின்றனர். ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியின் சேவையை பார்த்து ஆனந்த் மகேந்திரா அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சிவில் கேஸ் நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
இந்த நிலைப்பாட்டில் கமலாத்தாள் தனக்கு மாதம்தோறும் 2 சிலிண்டர்களை வழங்கிவரும் பாரத பிரதமர் மோடியை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார். மோடி இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்க அனுமதி வேண்டும் எனவும் இல்லையெனில் தன்னுடைய இடத்திற்கு பிரதமர் வந்து இட்லி சாப்பிட்டு செல்ல வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.






