இந்த பாடகி பிக்பாஸ் வீட்டிற்குள் போகிறாரா..?
பிக் பாஸ் ஐந்து சீசன்கள் தற்போது வரை முடிந்திருக்கிறது. அடுத்த சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வர போகிறார்கள் என எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவை தொகுத்து வழங்கி வரும் ரக்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் என சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு போட்டியாளர் பற்றி தகவல் வந்திருக்கிறது.
சூப்பர் சிங்கர் பாடகி ராஜலக்ஷ்மியை பிக் பாஸ் 6ல் போட்டியாளராக கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அவர் ஷோவுக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆறாவது சீசனை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.






