கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி அளித்துள்ள புகார்..!
மறைந்த நடிகர் ரகுவரன் குறித்தும், தன்னை பற்றியும், பாஜக மூத்த தலைவர்கள் குறித்தும் இழிவான கருத்தை பதிவிட்ட கிஷோர் கே.சாமி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ரோகினி புகார் அளித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு கிஷோர் கே.ஸ்வாமி தனது பேஸ்புக் வலைதளப் பக்கத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் தன்னைப்பற்றி இழிவுபடுத்தும் வகையில் கருத்து இருந்ததாக ஆன்லைன் மூலம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த தவறான கருத்துக்களால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் இதேபோல் பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவு விட்டதாகவும் ரோகிணி புகாரில் கூறியுள்ளார்.
ரோகிணி அளித்துள்ள புகார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






