தலைக்கேறிய போதை.. எச்சரித்ததால் காவலருக்கு விழுந்த அடி..!
நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அருகே மதுபோதையில் பைக்கில் வந்து கீழே விழுந்த இருவரை தட்டி கேட்ட ஊர் காவல் படையினரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செங்கோட்டை சேர்ந்த சகோதரர்களான பொம்மையன் மற்றும் தாமரை கண்ணன் ஆகிய இருவர் ஒரே நேரத்தில் மதுபோதையில் வந்து தடுமாறி விழுந்துள்ளனர்.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படையினர் இருவரையும் மீட்டு எச்சரித்த நிலையில் அவர்களிடம் அத்துமீறிய சம்பவத்தில் ஒரு கட்டத்தில் ஊர்காவல் படையினரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்தான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இருவரும் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





