இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிப்பு..!
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தல் உள்ள வகையில் உருமாறிய வகை வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மூன்று தினங்களுக்கு முன்பு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்னாபிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த பயணி ஒருவருக்கும், பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைப்போல் மகாராஷ்டிராவில் மேலும் ஒரு இளைஞருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
டெல்லிக்கு வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 9 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் இந்தியாவில் நேற்றுவரை ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.






