டிக் டாக் வீடியோவை பதிவிட்டதால் மனைவியை கொலை செய்த கணவர்!
எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் தற்கொலை என நாடகமாடியிருக்கிறார். டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதற்காக மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தள்ளுர் கிராமம் என்ற கிராமத்தை சேர்ந்த பாத்திமா கனிக்கிரியை சேர்ந்தவரான பாச்சுவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பாத்திமாவுக்கு டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிடும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதை பல பேர் பார்த்து கமெண்ட் எழுதுவதால் ஆத்திரமடைந்த கணவர் டிக்டாக்வீடியோ வெளியிடக்கூடாது என மனைவியை எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டில் உள்ள அறையில் பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் பாச்சு சத்தம் போட்டுள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பாத்திமாவின் உடலை இறக்கி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து மனைவியை கொலை செய்த பாச்சுவை போலீசார் கைது செய்தனர். டிக்டாக்வீடியோ வெளியிட்டதற்காக சந்தேகத்தில் மனைவியை கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




