பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்தில் பிரேக் பிடிக்காததால் நடைமேடையில் பேருந்து ஏறியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
பேருந்து நிலையத்திலிருந்து குண்டூர் செல்வதற்காக பயணியுடன் காத்திருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர் பேருந்தை எடுக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது.
இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் அதே பேருந்து நடத்துனர், ஒரு குழந்தை, ஒரு பெண் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.





