வீட்டில் தனியாக இருந்த அரசு அதிகாரியை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு சுப்பிரமணியபுரா பகுதியில் அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறைக்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த பிரதிமா கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார்.
அவரது சகோதரர் அவரை பலமுறை தொடர்பு கொள்ள வேண்டி முடியாததால் நேரடியாக வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது பிரதிபா கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.





