பிரபல இயக்குனர் சுரேஷ் சங்கையா காலாமானார்..!
ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார்.ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா.
2017ல் நடிகர் விதார்த் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரேம்ஜி நடிப்பில் அவர் இயக்கிய சத்திய சோதனை படமும் வித்தியாசமான கதைக்களமாகவே அமைந்தது.
ஒரு கொலை, காவல் நிலையம், அப்பாவி கதாநாயகன், நான்கு கொலைகாரர்கள் என பிளாக் காமெடியில் வெளிவந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.ஆனால் சத்திய சோதனைக்குப் பிறகு அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் இன்னும் வெளியாகவில்லை.
அதில் ஒரு படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தார்.இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் சுரேஷ் சுங்கையா சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ் சங்கையாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.






