--- --:--:-- --

கனமழை எதிரொலி: பள்ளி கல்லூரி விடுமுறை!

1

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

தென் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை இரவிலும் நீடித்தது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 

தொடர்ந்து தென் மாவட்டங்களில் கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களுக்கு நாளை (24ஆம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Right Menu Icon