குடியிருப்பு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை..சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் அபாயம்..!
தேனி அல்லிநகரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகராட்சி 31 வது வார்டு திட்ட சாலையில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
மேலும் இங்கு நியாய விலை கடை, வழிபாட்டுத்தலங்கள், மருத்துவ ஸ்கேன் போன்ற முக்கிய இடங்கள் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தெருவில் அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது என்று குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த அரசு டாஸ்மாக்கடையை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





