--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த எம்.எல்.ஏ.வின் கார்..!

5

யிலாடுதுறை மாவட்டத்தில் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தன் கார்த்திகேயன் பயணித்த கார் மோதியதில் பள்ளி மாணவர் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு வீட்டின் போர்டிகோவில் நிறுத்தி இருந்த கார் மற்றும் டூவீலர் மீது மோதி நின்றது.

 

அந்த வழியாக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை காயமடைந்த இருவரையும் ஏற்று அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

எம்எல்ஏ காரைக்காலுக்கு சென்று விட்டு ஊரு திரும்பிக் கொண்டிருந்த பொழுது சர்வீஸ் சாலையில் இருந்து திடீரென நெடுஞ்சாலை சாலைக்கு ஏறியதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 18 வயது கொத்தனார் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon