கொடைக்கானலில் சாலையில் சரிந்த ராட்சத மரம்..!
கொடைக்கானல் நட்சத்திர ஏரி சாலையில் ராட்சதமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
நட்சத்திர ஏரி சாலையில் உள்ள பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.





