டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர்..!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
மசோதாக்களுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் வழங்காத ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 19ஆம் தேதி ஆளுநர் டெல்லி பயணம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து ஆளுநர் யார் என்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






