--- --:--:-- --

குழந்தைகள் செல்போன், டிவி பார்க்க அரசு தடை..!

3

ரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் பார்ப்பதற்கும் டிவி பார்ப்பதற்கும் ஸ்வீடன் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஸ்வீடன் அரசு அறிவித்துள்ளது.

 

குழந்தைகள் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது தற்பொழுது அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஸ்வீடனில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை செல்போன் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து முற்றிலும் விளக்கி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் செல்போனை பார்க்க அனுமதிக்க கூடாது என்றும் ஸ்வீடன் நாட்டு பொது சுகாதாரத்துறை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

 

Right Menu Icon