--- --:--:-- --

இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

3

வம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

 

அதன் படி நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 220 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,700க்கும், சவரனுக்கு ரூ. 1,760 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 93,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து இன்று (நவம்பர் 12) தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

அதன்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,600க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 92,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.9,665க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.77,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.173க்கும், ஒரு கிலோ ரூ.1,73,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon