--- --:--:-- --

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.கோவை மாநகர காவல் துறை அதிரடி !!!

15

கோவை ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு ( வயது 24 ).இவர் கடந்த ஜூன் 8 ஆம் தேதி தனது வீட்டின் முன்பு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த சார்லஸ் ஸ்ரீராம்,உதய் விக்ரம்,ஜாக்கி (எ) பிரதீப் குமார்,மற்றுமொரு உதய் விக்ரம் உள்ளிட்ட நால்வரும் விஷ்ணுவையும்,அவரது நண்பர் அஜீத் குமாரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியும்,மற்றுமொரு நண்பரான ராஜேஸ் என்பவரை அரிவாளால் வெட்டியும்,கொலை மிரட்டல் விடுத்தும் விஷ்ணுவிடம் இருந்து செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.

 

இது குறித்து விஷ்ணு ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஒரே நாளில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும்,தொடர்ந்து வழிப்பறி,அடிதடி,கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன்,சட்டம்-ஒழுங்கு தெற்கு உதவி ஆணையர் செட்ரிக் மேனுவல் பரிந்துரையின் பேரில் கோவை கமிஷனர் சுமித் சரண் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.அதனையடுத்து நால்வரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கோவை சிட்டி கமிஷனர் சுமித் சரண் கூறுகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon