--- --:--:-- --

நொடியில் நடந்த விபத்தால் ஐந்து பேர் பரிதாபம் மரணம்..!

2

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் நூலகல்லி தாலுகா கிராமத்தை சேர்ந்த 12 பேர் ஆந்திர மாநிலத்தில் கற்றாழை அறுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த எர்ணகள்ளி கிராமம் அருகே சென்ற பொழுது சிவகாசியில் இருந்து வெளியூர் நோக்கி வேகமாக சென்று தனியார் பேருந்து டிராக்டரின் பின்புறம் ஓடியது. இதில் டிராக்டரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

 

இந்த விபத்தில் முத்து, மல்லி, முனுசாமி, வசந்தி ஆகியோருடன் மூன்று மாத பெண் குழந்தை வர்ஷனியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த ஏழு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon